இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
இன்று போய் நாளைவரும்
இதுவும் போய் என்னவரும்
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
இருக்கும் போது உண்ணவையி
இல்லாத போது உன்னவையி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
சிரிச்சவனுக்கு சிங்காரி
சினுங்கியவனுக்கு பூக்காரி
சிந்திச்சா ஏது வீட்டுகாரி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
விடிஞ்சா சூரியன் வரும்
முடிஞ்சா சந்திரன் வரும்
நடுவுல சாய்ஞ்சா ஆதி
தேய்ந்து வளர்ந்தா மதி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
சுழலும் பூமியில்
சுழலும் வாழ்க்கை ஒர் வட்டம்
சுற்றினாலும் சுற்றாவிட்டாலும்
சுருக்கம் ஒர் புள்ளி
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
- படுகை.காம் - ஆதி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: