Alaigal Oivadhillai - Video Songs


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.



காதல் ஓவியம் பாடும் காவியம்
தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் [௨]

தேடினேன் ஒ ஒ ஒ ஒ ,,,,என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தென் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்று கோடி இன்பம் கோடி என்றும் காணலாம்

.........காதல் ஓவியம்......


தாங்குமோ என் தேகமே
மன்மதனின் மலர் மறைந்த கால் களிலே
ஓடும் கீரலே ,,வா என் அருகிலே
உள்ளம் கூடி கண்கள் தேடி பூஜை காணலாம்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ஒ ஒ ஒ ஒ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஆ ஆ ஆ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

இம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏ ஏ ஏ ஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
இது காதல் பாரம் இரு தொழில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை
மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே


0 comments: